மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலையுடன் செல்பி...அன்பாக பேசி சகோதரியின் தலையை துண்டித்த தம்பி...நெஞ்சை பதைபதைக்கும் பயங்கர சம்பவம்.!
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கோயேகாவ் கிராமத்தை சேர்ந்தவர் சோபா. இவருக்கு 19 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சோபாவின் மகள் கடந்த ஜூன் மாதம் பெற்றோரின் சம்மதமின்றி 20 வயது இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சோபாவின் குடும்பத்தினர் மனமுடைந்தனர். மேலும் குடும்ப மனம் போய்விட்டதாகவும் கருதினர். இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட மகள், கணவருடன் லட்காவ் கிராமத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து சோபா தனது மகன் சங்கித்துடன் மகளை பார்க்க நேற்று முன்தினம் மதியம் சென்றுள்ளார்.
அப்போது மனைவி தம்பி மற்றும் தாய் வருகையால் கணவர் வீட்டில் இருக்கும் வேறு ஓர் அறைக்கு சென்றுள்ளார். தாய்,மகள்,மகன் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் இளம்பெண் தாய், தம்பிக்கு காபி போட சமையல் அறைக்கு சென்றார்.
அப்போது பின்னால் சென்ற தம்பி, குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்த அக்காளை அரிவாளால் கழுத்தை துண்டித்துள்ளார். சத்தம் கேட்டு இளம்பெண்ணின் கணவர் ஓடி வருவதற்குள் தம்பி, அக்காளின் தலையை துண்டித்துவிட்டார். இதனால் பயந்து போன கணவர் உயிருக்கு பயந்து ஓடினார்.
அதன்பின் துண்டித்த தலையுடன் தாய் மற்றும் மகன் இருவரும் செல்பி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதனையடுத்து இருவரும் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.பெற்றோரின் சம்மதம் இன்றி மகள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால், பெற்ற தாயும் உடன்பிறந்த சகோதரனும் இணைந்து கர்ப்பமாக இருந்த மகளை கௌரவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.