மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேச தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இளம் பெண் மட்டும் தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த சிவக்குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் உடலுறவு வைத்ததாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் வரவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்தப் பெண் பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது மட்டுமில்லாமல் 85,000 ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். மேலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் விரக்தி அடைந்த அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.