8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
நள்ளிரவில் பேய்போல வேடமிட்டு இளைஞர்கள் செய்த அட்டூழியம்! இறுதியில் நேர்ந்த விபரீதம்! எல்லாம் இதற்காகத்தானா?
பெங்களூர் மத்திகறேவில் உள்ள சாந்திநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூக்கிபீடியா என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த யூடியூப் சேனல் மூலம் அவர்கள் மக்களை கேளிக்கை செய்து அவற்றை வீடியோவாக வெளியிட்டு பிரபலமடைய முயற்சி செய்து வந்துள்ளனர்.
அதாவது அவர்கள் நள்ளிரவில் வெள்ளைநிற உடையணிந்து தலையில் சவுரி முடி வைத்து பார்ப்பதற்கு மிகவும் கொடூரமான பேய் போல வேடமிட்டு சாலையில் செல்லும் நபர்கள் மற்றும் தூங்கிக் கொண்டிருக்கும் சிலரை எழுப்பி பயமுறுத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞர்கள் ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து இளைஞர்கள் போலீசாரிடம், யூடியூப் சேனலுக்காகவே தங்கள் இவ்வாறு செய்ததாகவும், தங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் போலீசாரோ அந்தகாரணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் இதுபோன்ற செயல்களால் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மறுத்துள்ளனர். மேலும் இவ்வாறு பெண் வேடமிட்டு பொதுமக்களை நள்ளிரவில் பயமுறுத்திய காரணத்தினால் அவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்களை இனி எவரும் செய்யக்கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.