மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வருட குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் வந்தடைந்தார் இந்தியா!
இந்தியாவின் 71வது குடியரசு தின விழா வரும் ஞாயிறு அன்று 26-01-2019 அன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
Brazilian President arrives in India on his four-day visit, to be Chief Guest at Republic Day parade
— ANI Digital (@ani_digital) January 24, 2020
Read @ANI Story | https://t.co/3r9WIzNzYS pic.twitter.com/5COncc9pVT
இந்தியா வந்த பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ இன்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு விவகாரங்கள் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அவருக்கு, நாளை ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கிறார்.
இந்தியா, பிரேசில் இருநாட்டின் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக, இரு நாட்டு தொழிலதிபர்களின் கூட்டத்திலும், பிரேசில் அதிபர் மெசியாஸ் பங்கேற்க உள்ளார். இத்துடன் மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் திங்கள் கிழமை ஜனவரி 27 ஆம் தேதி பிரேசில் திரும்புகிறார்.