மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்ல இதை செய்யுங்க.. தாலி கட்டும் நேரத்தில் செம ஷாக் கொடுத்து மணமகள் செய்த காரியம்! ஆடிபோன மாப்பிள்ளை!
உத்தரபிரதேச மாநிலம் Aurraiya என்ற பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவரது மகள் அர்ச்சனா. இவருக்கு அண்மையில் ஷிவம் என்பவருடன் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் மணமகளின் குடும்பத்தார்கள் ஷிவம் நன்கு, படித்து செட்டிலானவர் என எண்ணி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணத்தை கடந்த 20-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் கோலாகலமாக நடைபெற்று திருமண ஊர்வலமும் நடைபெற்றுள்ளது.
ஆனால் அப்பொழுதெல்லாம் மாப்பிள்ளை கருப்பு கண்ணாடியை அணிந்து இருந்துள்ளார். இதனால் மணமகள் குடும்பத்தாருக்கு மாப்பிளையின் கண்களில் பாதிப்பு இருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மணமகளுக்கும் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் தாலி கட்டுவதற்கு சிறிதுநேரம் இருக்கும்நிலையில், மணமகள் மாப்பிள்ளையிடம் ஏன் கண்ணாடியை கழட்டாமல் இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். மேலும் செய்தி பேப்பர் ஒன்றை கொடுத்து கண்ணாடியை கழற்றி விட்டு அதை படிக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாப்பிள்ளை அதனை வாசிக்க தடுமாறியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் உடனே திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அர்ச்சனாவின் குடும்பத்தார்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணையாக கொடுத்தவற்றை திரும்பத் கொடுக்கும்படியும் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை மாப்பிள்ளை குடும்பத்தார்கள் அதனை திருப்பிக் கொடுக்காததால் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.