மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் லிப்ட் தருவீங்களா... காரில் ஏறிய ராஜநாகம்.. அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர்..!
பாலக்காடு அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் 10 அடி நீள ராஜநாகம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பாலக்குழி பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் தனது காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இதில் காரின் கதவு சரியாக மூடாமல் இருந்ததை அறியாமல் குஞ்சுமோன் உறங்க சென்றுள்ளார். அப்போது காரின் உட்புறத்தில் இருந்து திடீரென சத்தம் கேட்டதால் குஞ்சுமோன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது காரின் உள்ளே 10 அடி நீள ராஜநாகம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து குஞ்சுமோன் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் 10 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட பாம்பை லாபகரமாக மீட்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்