மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் - பேருந்து நேர்ரெதிரே மோதி பயங்கர விபத்து; 9 பேர் பரிதாப பலி., 29 பேர் படுகாயம்.!
தேசிய நெடுஞ்சாலையில் கார் - பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் நவ்சாரி பகுதியில் தனியார் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், கார் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மொத்தமாக 9 பேர் பலியான நிலையில், 29 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கிறார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.