நாடு முழுவதும் குறைந்த விலையில் அரிசி விற்பனை.. மத்திய அரசு அறிவிப்பு!



Central govt introduce Bharat rice

நாடு முழுவதும் பாரத் அரிசி என்ற பெயரில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Bharat rice

இந்த நிலையில் அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் பாரத் அரிசி என்ற பெயரில் ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர், கடந்த ஆண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் பாரத் என்ற பெயரில் ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Bharat rice

இந்த அரிசி அடுத்த வாரத்தில் இருந்து 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான பைகளில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாரத் ஆட்டோ என்ற பெயரில் கோதுமை ஒரு கிலோ ரூ.27.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது