இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
"இந்தியாவில் சேவையை நிறுத்தும் வாட்சாப் நிறுவனம்.?! மத்திய அரசின் கெடுபிடியால் அதிர்ச்சி.!
இந்தியாவில் திருத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில், சமூக வலைதள பக்கத்தில் முதலில் தகவலை யார் பதிவிட்டது என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரைவசி வசதிகள் மாற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக whatsapp மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணையில் கலவரத்தை தூண்டும் செய்திகள் மற்றும் போலி செய்திகள் உள்ளிட்டவற்றை முதலில் யார் பரப்பியது என்பதை அறியும் அடிப்படையில் தான் இந்த திட்டம் அமல்படுத்த பட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு whatsapp நிறுவனத்தின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் தரவுகள, தகவல்கள் உள்ளிட்டவை தனி நபரின் உரிமை. அதை பாதுகாப்பாக நாங்கள் வைத்திருப்பதால் தான் எங்கள் செயலியை பலரும் பயன்படுத்துகின்றனர். ஒரு செய்தியை அனுப்புபவர் மற்றும் பெரும் நபரை தவிர மற்றவர்கள் பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டு இருக்கும் இந்த வசதியை நீக்க சொல்லி இந்திய அரசு எங்களை வலியுறுத்தும் பட்சத்தில் நாங்கள் இந்திய நாட்டில் எங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்வோம்." என்று தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து whatsapp நிறுவனம் சார்பில், "இது போன்ற ஒரு விதிமுறை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா?
பிரேசில் போன்ற நாடுகளில் கூட இப்படிப்பட்ட விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சமூக வலைதள சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களான எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் திடீரென அரசு இந்த முடிவை கொண்டு வந்தது சரியா?" என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இது குறித்த வழக்கு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒருத்தி வைக்கப்பட்டுள்ளது. whatsapp நிறுவனத்தின் இந்த கெடுபிடி வாதத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து whatsapp நிறுவனம் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.