பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை..! மீட்க சென்ற அதிகாரிகளை மிரளவிட்டு நேர்ந்த விபரீதம்..! அலறவைக்கும் வீடியோ இதோ..!



cheetah-attacked-forest-officer-in-telungana-state

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் ராஜ்கொண்டா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்தை காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் ஏராளமான பயிர்கள் வீணாகியுள்ளது. இந்நிலையில் பயிர்களை காப்பாற்ற விவசாயி தனது விவசாயநிலத்தில் சுருக்குவலையை  விரித்து வைத்துள்ளார்.

பின்னர் நேற்று சென்று பார்த்தபோது அந்த வலையில்  சிறுத்தை ஒன்று சிக்கி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி உடனே இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வலையில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வலையில் இருந்து தப்பித்த சிறுத்தை மின்னல் வேகத்தில் பாய்ந்து, அதிகாரிகள் இருவரை தாக்கியுள்ளது. இந்நிலையில் அவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காட்டிற்குள் ஓடி புதர் ஒன்றில் மறைந்திருந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பத்திரமாக காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.