மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழைப்பழ பேச்சு.. சிறுமிகளின் அந்தரங்க போட்டோ.. பரபரப்பு மிரட்டலால் பெற்றோரிடம் கதறிய பரிதாபம்.!
கேரள சிறுமிகளிடம் சமூக வலைத்தளம் மூலமாக பழகி, அவர்களது ஆபாச படங்களை வைத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் வசித்து வந்த 13 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகளிடம், சென்னையில் வசித்து வந்த மார்க் டிகுரூஸ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அப்போது அவர் சிறுமிகளிடம் வாழைப்பழமாய் பேசி ஆபாச படங்களை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சிறுமிகள் சில நாட்களாக அவரிடம் பேசாதிருந்த நிலையில், சிறுமிகளிடம் 'நீங்கள் என்னிடம் மட்டுமே பேசவேண்டும், வேறு யாரிடமாவது பேசவோ, பழகவோ செய்தால் உங்களுடைய ஆபாச படத்தை நான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமிகள் இந்த விஷயம் தொடர்பாக தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து பெற்றோர்கள் கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் தமிழக போலீசாருக்கு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் துறையினர் மார்க்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பரங்கிமலை மாங்காளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மார்க் டிகுரூஸ், அவரது செல்போன் மூலமாக இதுபோன்ற சிறுமிகளுக்கு வலைவிரித்து வாழைப்பழமாய் பேசி ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அத்துடன் இவரது செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.