தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!



Chennai RMC Says Rain till 10 PM on 16 Oct 2024 

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை சென்னைக்கு அருகில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னையில் மிக கனமழை

இதனால் இன்று தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மிககனமழை பெய்தது. இன்று காலைக்கு மேல் மழை குறைவது போல தோன்றினாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரவு மற்றும் அதற்கு மேல் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க: #Breaking: நெருங்குகிறது... 11 மாவட்டங்களில் நாளை விடுமுறை; புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

chennai

ஆரஞ்சு & மஞ்சள் எச்சரிக்கை

இந்நிலையில், அக்.16 இன்று இரவு 10 மணி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, காரைக்கால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கான மஞ்சலெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் சோகம்... நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான 5 வயது குழந்தை.!! கதறிய பெற்றோர்.!!