மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking# ஐஏஎஸ், ஐபிஎஸ்-க்கான சிவில் சர்வீஸ் தேர்வு இன்று இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது! தேர்வர்கள் மறக்காமல் இவற்றை எடுத்துச்செல்லுங்கள்.!
நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் க்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. காலை 9.20 மணிக்கு முதற்கட்ட தேர்வும், பிற்பகல் 2.20 மணிக்கு இரண்டாம் கட்ட தேர்வும் நடைபெறவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதவுள்ளனர். கொரோனா காரணமாக மே 31 ஆம் தேதி மற்றும் ஜூன்
5 ஆம் தேதி என ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வு இன்று அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வர்கள் முதல் தாள் தேர்வை எழுத காலை 9.20 மணிக்கு முன்பாகவும், 2-ம் தாளை எழுத பிற்பகல் 2.20 மணிக்கு முன்பாகவும் தேர்வு மையங்களுக்குள் வந்துவிட வேண்டும். வாயிற்கதவு பூட்டப்பட்ட பிறகு யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணுப் பொருட்களுக்கு அனுமதி கிடையாது என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் கருப்பு மை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். நுழைவுச்சீட்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். நுழைவுசீட்டில் எதாவது தெளிவில்லாமல் இருந்தால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும். தேர்வர்களுக்குப் போக்குவரத்து, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.