மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்ட்டிக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு 4 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!
மேற்கு வங்கத்தில் 19 வயதான இளம்பெண் ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் பார்ட்டிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் அமையும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடினர்.
அப்போது மாணவி பார்ட்டி நடைபெற்ற இடத்தில் உள்ள அறையில் அரை மயக்கத்தில் கிடந்துள்ளார். மயக்கத்தில் கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
மாணவிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவனது. மேலும் மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மனைவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.