சினிமாவையும் மிஞ்சிய சதி.! விஷம் கொடுத்து காதலனை தீர்த்துகட்டிய கல்லூரி மாணவி.! அதிரவைக்கும் காரணம்!!



college-girl-get-arrest-murdered-her-lover

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாறசாலை முறியன்கரை என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ். 23 வயது நிறைந்த இவர் குமரி மாவட்டத்தில் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியில் வசித்து வந்த கிரீஷ்மா என்ற 22 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. எம்.ஏ படித்துவரும் கிரீஷ்மா கல்லூரிக்கு செல்லும் போது ஷாரோன் உடன் வெளியே சுற்றியுள்ளார்.

இந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் வேறொரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதற்கு கிரிஷ்மா ஒத்துக்கொள்ளவே அண்மையில் ஷாரோனை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஷாரோனும் அவரது நண்பருடன் கிரீஷ்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கிரீஷ்மாவை சந்தித்து திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Murder

இதற்கிடையில் ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. பின் போலீசார் விசாரணையில், கிரீஷ்மாவிற்கு வேறொரு பணக்கார மாப்பிள்ளையை பார்த்த நிலையில், அவரது ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் அவருக்கு திருமணமானால் முதல் கணவர் இறந்துவிடுவார் என கூறியதால், கிரீஷ்மா ஷாரோன் ராஜை ரகசியமாக திருமணம் செய்துவிட்டு அவரை விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக கூறபட்டது.

இதனை தொடர்ந்து கடும் விசாரணைக்கு பிறகு, கிரீஷ்மா தான் கொலை செய்ததை ஒப்புகொண்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு கழிவறைக்கு செல்வதாக கூறி சென்ற கிரீஷ்மா, கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின் போலீசார் கொலைக்கு உதவியாக இருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்துள்ளது.