மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: கேப்டன் வருண் சிங் காலமானார்... இந்திய மக்களுக்கு மீண்டும் பெரும் சோக தகவல்.!
கடந்த டிச. 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, வெலிங்ஸ்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்லவிருந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 வீரர்கள் இராணுவ ஹெலிகாப்டரில் பயணிக்கையில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தனர்.
இவர்களில், விமானியான கேப்டன் வருண் சிங் படுகாயத்துடன் மீட்கப்பட்டு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து, பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானி கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு மீண்டும் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.