கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து.. அடையாளம் காணப்படாத 28 உடல்கள்.. அடக்கம் செய்ய அரசு முடிவு..!



coromandel-express-accident-28-unidentified-bodies-govt

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட கோரவிபத்தின் மரண ஓலம் இன்றும் நம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 291 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் பலியான 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாமல் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

Coromandel Express

இந்நிலையில் இந்தக் கோர சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் உயிரிழந்தவர்களின் உடல்களைக் காண உறவினர்கள் யாரும் வராத காரணத்தினால் இவரது உடல்களை அடக்கம் செய்ய புவனேஸ்வர் மாநகராட்சி முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் இறந்த 28 பேரின் உடல்களை மாநகராட்சி உதவி சுகாதார அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அதன் பின்னர் உடல்கள் அனைத்தும் நாளை தகனம் செய்யப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிர் இழந்தவர்களின் தகவல்கள் புவனேஸ்வர் மாநகராட்சியிடம் இருக்கும் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் யாரேனும் தகவல் கேட்டு வந்தால் உரிய ஆவணங்கள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.