#Breaking: கோரமண்டல் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!



coromandel-express-train-accident-6-died-100-injured

சென்னை நோக்கி பயணித்த அதிவிரைவு இரயில் விபத்தில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையம் நோக்கி இன்று புறப்பட்ட கோரமண்டல் அதிவிரைவு இரயில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில், வனப்பகுதியில் தடம்புரண்டு சரக்கு இரயில் மீது மோதியதில், அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு போயின. 

இந்த விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியானது விரைந்து நடைபெறுகிறது. மக்கள் பலரும் தங்களின் உறவினர்கள், நண்பர்களை தேடி பயணிக்க தொடங்கியுள்ளனர்.  

விபத்தில் தற்போது வரை 100 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும், 6 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸோரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, அவசர அழைப்புகளுக்கு 6782 262 286 மேற்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.