மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா.!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15,208 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.
இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா உட்பட பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.