கொரோனாவிலிந்து காப்பாற்றிய மருத்துவர்! கண்கலங்கியவாறு பெண் செய்த காரியம்!! நெகிழ வைத்த ஒற்றை புகைப்படம்!!



corono-cured-old-lady-hug-and-thank-doctor

நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரசால் ஒருநாளைக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் துயரமும் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய கொடூரமான இக்கட்டான சூழ்நிலையிலும் சில சம்பவங்கள் நெகிழ வைக்கும் வகையில் நேர்ந்து வருகிறது.

இவ்வாறு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதில் 75 வயதான பாட்டி ஒருவர் பத்து நாட்களுக்கு மேல் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பும்போது தனக்கு சிகிச்சையளித்து, உறுதுணையாக நின்ற மருத்துவரை கட்டியணைத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து ஆசீர்வதித்துள்ளார்.

corono

இத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த  தன்மோய் டே, இதைவிட ஒரு அழகான புகைப்படம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா? என நெகழ்ச்சியுடன் கேட்டுள்ளார். மேலும் இத்தகைய புகைப்படங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.