மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மருமகள்... விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்!!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமர்ஜோதி - பந்தனா கலிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில் முதலில் சந்தோசமாக வாழ்ந்த தம்பதியினருக்கு இடையே விரிசல் ஏற்பட தொடங்கியது. அந்த சமயத்தில் தான் கவிதாவுக்கு அருப் தேகா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அருப் தேவாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார் கலிதா. மருமகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே சந்தேகமடைந்த கவிதாவின் மாமியார் கலிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலிதா மாமியாரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார்.
கணவரை காதலன் உதவியுடன் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார் கலிதா. சில நாட்கள் கழித்து உடலை காட்டு பகுதியில் வீசி விட்டு நல்லவர் போல் காவல் நிலையம் சென்று மாமியார் மற்றும் கணவரை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அத்துடன் விடாமல் சில நாட்கள் கழித்து மாமியாரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மாமியாரின் சகோதரர் எடுத்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.
அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மாமியாரின் வங்கி கணக்கிலிருந்து கலிதா தான் பணத்தை எடுத்து விட்டு பொய் புகார் கூறியது அம்பலமாகியுள்ளது. அதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மாமியார் மற்றும் கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் கலிதா. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.