மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி அன்று இதை செய்தால் வீட்டில் செல்வம் சேரும்! இந்த பூஜை செய்தால் அவ்வளவு நல்லதாம் தெரியுமா?
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக பண்டிகை நாள் என்றாலே சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை மனத்தில் ஒரு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும். புது உடை, மத்தாப்பு, இனிப்பு இவற்றுடன் சிறப்பு பூஜைகளும் தீபாவளி நாளில் மிகவும் முக்கியமான ஓன்று.
தீபாவளி நாளானது மகாலட்சுமிக்கு மிக உகந்த நாளாக கருதப்படுகிறது. தீபாவளி நாளன்று மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்தால் வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
மேலும் விநாயகர் மற்றும் அன்னை மகாலட்சுமி மகாவிஷ்ணுவோடு இருக்கும் புகைப்படத்தை மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பின்னர் மஞ்சள் சரட்டில் பூவையும், மஞ்சளையும் முடிந்து அதைப் படத்துக்கு, அணிவிக்க வேண்டும்.
அட்சதை, குங்குமம், உதிரிப்பூக்கள் ஆகியவற்றை அர்ச்சனைக்குத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.லட்சுமியின் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.