மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணாடிய திருப்பி வெச்சுட்டோம்; ஆட்டோ கண்டிப்பா ஓடும்..!! புதிய ஜெர்ஸியுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்..!!
சென்னை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய ஜெர்ஸியுடன் விளையாடும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 65 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தர்மசாலாவில் இன்று நடைபெறும் 66 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மொத்தம் உள்ள 70 லீக் போட்டிகளில் இன்னும் 5 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டெல்லி, ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 இடங்களுக்கான போட்டியில் முறையே சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், நாளை டெல்லியில் நடைபெறும் 67 வது லீக் போட்டியில் சென்னை அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் லீக் சுற்றில் இதுவே கடைசி போட்டி என்பதால், அதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
இதற்கிடையே சென்னை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய ஜெர்ஸியுடன் விளையாடும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பு தொடரில் மும்பை, பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் புதிய ஜெர்ஸியுடன் விளையாடி உள்ளன. லக்னோ அணியும் தனது கடைசி லீக் போட்டியில் புதிய ஜெர்ஸியுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.