ஆசிட், மரத்தூள் கலக்கப்பட்ட 15 டன் போலி மசாலா பொருட்கள் பறிமுதல்; மக்களே உஷார்.!



Delhi Cops Captured fake Spices Mix with acid wood 

 

தினமும் நாம் சமையலுக்கு கட்டாயம் பயன்படுத்தும் மசாலா பொருட்களை பெரும்பாலும் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வணிகரீதியாக தயாரிக்கப்படும் இவைகளில் அதன் தரம், நிறம், பல ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாமல் இருக்க என அரசின் விதிக்குட்பட்டு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படும்.

பாக்கெட் மசாலா மோகம்:

விபரம் அறிந்தவர்கள் பலரும் எந்த விதமான மசாலாவாக இருந்தாலும், அதற்கான பொருட்களை வாங்கி வீட்டிலேயே மசாலா தயாரித்துக்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலான இந்திய வீடுகளில் இன்றளவில் பாக்கெட் மசாலா பொருட்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. 

டெல்லியில் உள்ள கரவால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட மசாலா பொருட்களில் தரமின்மை தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

போலியான மசாலா பொருட்கள் தயாரிப்பு கண்டுபிடிப்பு:

இந்நிலையில், பிரபலமான மசாலா நிறுவனங்களின் பெயரில் போலி பாக்கெட்டுகளை தயாரித்த கும்பல் ஒன்று, அதில் ஆசிட், மரத்தூள், எண்ணெய் ஆகியவற்றை கலந்து விற்பனை செய்துள்ளனர். இவ்வாறாக போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மசாலா பொருட்களின் அளவு பல டன் இருக்கும் என்றும், 15 டன் எடையுள்ள போலி மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.