மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமி மருத்துவமனைக்குள் பலாத்காரம்; பக்கத்து வீட்டுக்காரன் செய்த படுபயங்கர செயல்.. அதிரவைக்கும் சம்பவம்.!
தன்னை காணவந்த சிறுமியை கயவன் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லோனி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சிறப்பு அரசு மருத்துவமனையில் பியூனாக பணியாற்றி வருகிறார்.
கடந்த நவ. 4ம் தேதி சிறுமி தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அந்த நபரை மருத்துவமனைக்கு நேரில் காண சென்ற நிலையில், அவர் சிறுமியை தனது அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி கயவனின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனில்லை. இறுதியில் வீட்டிற்கு வந்த சிறுமி 2 நாட்கள் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், குரு தேஹ் பகதூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.