மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் சோகம்.. 4 தொழிலாளர்கள் பரிதாப மரணம்.!
4 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, அதில் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்று அனைவரும் பலியான சோகம் நடந்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் உள்ள ரோகினி செக்டர் 16-வது பகுதியில், நேற்று மாலை நேரத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது, பணியில் 4 பேர் ஈடுபட்டு இருந்த நிலையில், ஒருவர் தவறி சாக்கடைக்குள் விழுந்ததாக தெரியவருகிறது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற தொழிலாளர்கள் 3 பேர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
அவர்களும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மயக்கமடையவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவில் தொடங்கிய மீட்பு பணி நள்ளிரவிலும் நீட்டித்து நால்வரின் உடலும் மீட்கப்பட்டன. இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.