சுதந்திர தினம் vs குடியரசு தினம்! இரண்டும் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
70 வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்தியா குடியரசு நாடாகி நாளையொடு 70 வருடங்கள் ஆகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டுமே விமர்சியாக கொண்டப்படுகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு அதிகம் தெரியவில்லை.
சுதந்திரம் தினம் என்றால் என்ன?
மன்னர்கள் ஆட்சியில் மக்கள் ஒற்றுமை இல்லாமல், மன்னர்கள் காட்டிய வழியில்லையே வாழ்ந்து வந்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் எளிதாக நமது நாட்டை கைப்பற்றி அவர்களது ஆட்சியின் கீழ் இந்தியாவை கொண்டுவந்தனர்.
மன்னர்களின் ஆட்சியை ஒழித்து, ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா செயல்பட்டது. அதன்பின்னர் பல்வேறு சுதந்திர போராட்டங்கள், போராட்ட வீர்களின் மரணங்கள் என பல்வேறு சோதனைகளை கடந்து, ஒருவழியாக இந்தியாவை இந்தியர்களிடமே ஒப்படைக்க ஆங்கிலேர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, 1947 , ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியாவை சுதந்திர நாடக அறிவித்து ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினார். இதனையே நாம் சுதந்திர தினமான கொண்டாடுகிறோம்.
குடியரசு தினம் என்றால் என்ன?
ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் மக்கள் மன்னர் ஆட்சியின் கீழோ, அல்லது வேறொருவரின் கீழோ சென்றுவிட கூடாது என்பதற்காகவும், மக்களை யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை, மக்களே தீர்மானிக்கும் முழு சுதந்திரத்தைம் மக்களுக்கே பெற்றுக்கொடுத்த நாள்தான் குடியரசு நாள்.
அதன்படி, மக்கள் தங்களை ஆட்சி செய்யவேண்டிய நபரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய தொடங்கினர். இதற்கான கோட்பாடுகளை இந்தியா ஏற்றுக்கொண்ட நாள் 1950 , ஜனவரி 26 . இந்த நாளைத்தான் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.