இந்தியர்களின் அமெரிக்க வேலை கனவுக்கு ஆப்பு வாய்த்த டிரம்ப்.! அதனை தகர்த்தெறிவாரா ஜோ பைடன்.?



Donald Trump extends ban on H1 B visa

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் சில நாட்களில் தனது அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த ஹெச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார். 

Visa

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் சுகாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் இந்தத் தடையை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் பல லட்சம் பேர் அமெரிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் டிரம்ப் அரசு 3 மாதம் அதாவது மார்ச் மாதம் வரையில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீது தடை விதித்துள்ளது.

இதனால் அமெரிக்க வேலை கனவுடன் உள்ள ஏராளமான இந்திய ஐ.டி.துறையினர் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தான் அதிபராக பதவியேற்றவுடன் விசா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.