மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் குடிப்பதை தட்டி கேட்ட மனைவி.. உயிருடன் எரித்துக் கொன்ற கணவன்!
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் குடிப்பதை தட்டிக் கேட்க மனைவியை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முஜாரியா என்ற பகுதியில் முனீஸ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முனீஸ் தினமும் குடித்துவிட்டு வருவதும், வீட்டிலும் மது அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் முனிஷின் மனைவி வீட்டில் வைத்து குடிக்க வேண்டாம் என்று கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முனீஸ் தனது மனைவி மீது பெற்றோர் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து மனைவியின் உடலில் வேகமாக தீ பரவிய நிலையில், உடல் முழுவதும் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முனிஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.