வேலியே பயிரை மேய்ந்த அவலம்; 14 வயது சிறுமியை மதுபோதையில் சீரழித்த தந்தை.!



East Delhi Father Raped Daughter 

 

கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விகார் பகுதியில் வசித்து வருபவர் மக்ஸூத். இவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். 

தற்போது தனது மனைவி - 14 வயது மகளுடன் டெல்லியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் தனது 14 வயது மகளிடம் சொந்த தந்தையே அத்துமீறி இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தந்தையை கைது செய்தனர். 

தாய் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் மதுபோதையில் இருந்த தந்தை மகளுக்கு இக்கொடுமையை நிகழ்த்தி இருக்கிறார்.