மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்க்கும்போதே கண்கலங்குது!! பாகனின் இறுதிச்சடங்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை!! வைரல் வீடியோ.
பாகன் ஒருவர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்த நிலையில், அவர் வளர்ந்துவந்த யானை இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்து வந்தவர் ஓமன சேட்டன். இவர் சிறு வயதிலிருந்தே பிரம்மதேத்தன் என்ற யானை ஒற்றை மிகவும் பாசமாகவும், கருணை உள்ளதாகவும் வளர்த்து வந்துள்ளார். அந்த யானையும் அந்த பாகன் மீது மிகவும் அன்புடனும், நட்புடனும் பழகிவந்துள்ளது.
இந்நிலையில் யானையின் பாகனான் ஒமன சேட்டன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, சிகிக்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பழனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தை பெரிதும் பாதித்தது. பின்னர் அவரது உடல் ஊர் மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியநிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது வளர்ப்பு யானையான பிரம்மதேத்தன் அவரது உடலை பார்த்து தனது தும்பிக்கையை நீட்டி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது. இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் அனைவரும் கண்கலங்கினார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Touching. Elephant paying last respect to his Mahout. WA forward. pic.twitter.com/lZjBRyEdpO
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 4, 2021