மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீர்த்தத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார்.! அதனை வீடியோ எடுத்த சாமியாரின் மனைவி.! அதிர்ச்சிப் புகார்
கர்நாடக மாநிலம் அவலஹள்ளி பகுதியில் மக்களால் சக்தி வாய்ந்த சாமியார் எனக் கூறிக்கொண்டு ஆனந்தமூர்த்தி என்ற சாமியார் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் அந்த சாமியாரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் குடும்பத்துக்கு வரும் காலங்களில் பெரும் ஆபத்து வர போகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் உடனடியாக உங்கள் வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து சாமியார் ஆனந்தமூர்த்தி சொன்னதைக் கேட்ட அந்த பெண்ணும் பரிகார பூஜைக்கு சம்மதித்து தனது இல்லத்திற்கு சாமியாரை அழைத்திருக்கிறார். இதனையடுத்து அந்த சாமியாரும், அவர் மனைவி லதாவும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பரிகார பூஜையை தொடங்கியுள்ளனர். பூஜையின் போது தீர்த்தம் எனக் கூறி சாமியார் ஆனந்தமூர்த்தி போதைபொருளை கொடுத்துள்ளார். இதனை அருந்தியதும் அப்பெண் மயக்க நிலையில் இருந்துள்ளார். மயக்க நிலையில் இருந்த பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதனை சாமியாரின் மனைவி லதா வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் போலீசார் போலி சாமியார் ஆனந்தமூர்த்தி, அவரின் மனைவி லதா இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.