மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிங்கத்தின் பிடியில் சிக்கிய தனது பசு மாட்டை தந்திரமாக காப்பாற்றிய விவசாயி... வைரலாகும் வீடியோ!!
குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கீர் வனப்பகுதிக்கு அருகே பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கே வந்த பெண் சிங்கம் ஒன்று பசு மாட்டின் கழுத்தை கவ்வி இழுக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி எப்படியாவது மாட்டை காப்பாற்றி விட எண்ணியுள்ளார்.
அந்த விவசாயி சற்றும் யோசிக்காமல் உடனே அருகில் இருந்த செங்கல் கல்லை எடுத்து சிங்கத்தின் மீது வீசியுள்ளார். அதனை அடுத்து சிங்கம் தனது பிடியை விடுத்து காட்டு பகுதிக்குள் சென்று விட்டது. இந்நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் அந்த தைரியமான விவசாயிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.
ગીર સોમનાથ જિલ્લાના આલીદર ગામે સિંહણ દ્વારા ગાય ઉપર હુમલો કરેલ ત્યારે ખેડૂતે #Credit કિરીટસિંહ ચૌહાણ પોતાની ગાયને એક ખમીરવંતો પ્રયાસ કરેલ અને સફળતા મળેલ.
— Vivek Kotadiya🇮🇳 BJP (@VivekKotdiya) June 29, 2023
ખુબ ખુબ સલામ#lion #animalattack #cow #lioness #kingofthejungle #hunt #wildlife #india #nationalgeographic #discovery pic.twitter.com/lDYGub9bfZ