மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்த கொடூர தந்தை.! கொடுமை தாங்காமல் சிறுமி எடுத்த அதிரடி முடிவு.!
மகாராஷ்டிரா மாநிலம், மும்ப்ரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம், நீ பிறந்த போதே உனது தாய் இறந்து விட்டார் என கூறி அவரது தந்தை சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல் தந்தையின் கொடுமை தாங்காமல் சிறுமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சிறுமியின் புகாரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது தந்தை, சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.