மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்துப்பண்டிகையில் குத்தாட்டம் போட்ட கிறிஸ்தவ பாதிரியார்!. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையுள்ள நாடு என்பதை நிரூபித்தார்! வைரலாகும் வீடியோ!
மும்பையில் இந்துக்கள் பண்டிகையான நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாதிரியார் நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமையுள்ள நாடு இந்தியா என பொதுமக்கள் அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தாலும் கூட, மதம், சாதியின் பெயரால் இன்றுவரை பிரச்னை நடந்துதான் வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் இந்து மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சிறப்பாக கொண்டாடிய நவராத்ரி விழாவில், கிறிஸ்தவ பாதிரியாராக கிறிஷ்டியானோ டிசோசா கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
@minicnair @sanjayuvacha
— surendra shetty (@sursmi) 16 October 2018
Fr. Cristiano D'Souza, Rector of Don Bosco, Matunga, showed wonderful Inter-religious harmony. pic.twitter.com/GKwwLymuSa
இந்த சம்பவம் குறித்து பாதிரியார் கூறுகையில், நாங்கள் மக்களுக்கு இடையில் அன்பை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்த சம்பவம் நிகழ்ந்தது என தெரிவித்துள்ளார்.
இதே போன்று விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு பாதிரியார் ஒருவர் விநாயகர் சிலையை ஆலயத்திற்குள் வைத்து பூஜை செய்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.