மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுய ஊரடங்கு உத்தரவு! பிரசவ வலியால் துடிதுடித்த இளம்பெண்! ஆம்புலன்சில் தந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேற்று சுய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளா பாலக்காடு, முதலமடை சுள்ளியார் டேம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசன்.கூலித்தொழிலாளியான இவரது மகள் தேவி. 27 வயது நிறைந்த இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் அவருக்கு மார்ச் 29-ந்தேதி குழந்தை பிறக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திடீரென தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஆம்புலன்சை வரவழைத்து, மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நடுவழியிலேயே ஸ்ரீதேவிக்கு பிரசவவலி அதிகரித்து, அவர் துடிதுடித்துள்ளார். இந்நிலையில் நடுவழியிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, அவரது தந்தையே மகளுக்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை துண்டிக்காமல் தாயின் மார்பின் மீது அணைத்தவாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு தாயும், சேயும் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது