மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் தந்தை கைது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் பரத் கோஸ்வாமி. 33 வயதான இந்த நபர் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 43 வயது பெண்ணின் வீட்டிற்கு சென்று, அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதே நேரம் அவருடைய வீட்டிற்க்கே சென்று தனது 14 வயது மகளையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என தனது மகளை மிரட்டியுள்ளார். அந்தப் பெண் தனது தாயார் வந்தவுடன் தனக்கு நேர்ந்த சம்பவத்தை அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பரத் கோசாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.