முதன்முறையாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன பார்வையற்ற பெண்! இந்திய பெண்ணிற்கு குவிந்துவரும் பாராட்டுகள்!



first time visually impaired women got IAS


மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் பிரஞ்ஜால்  30 வயதான இவருக்கு 6 வயது இருந்தபொழுது, கண்பார்வையை இழந்து விட்டார்.  ஆனால் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சிறப்பாக படித்து தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124வது இடத்தைப் பிடித்தார். 

IAS

இந்தநிலையில் கேரளாவின் எர்ணாகுளம் உதவி ஆட்சியராக பயிற்சி காலத்தில் அவர் நியமிக்கப்பட்டார்.  அவரது பயிற்சி முடிந்து கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் துணை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்று கொண்டார்.

பிரஞ்ஜால் ஏற்கனவே எர்னாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியதன் அனுபவத்தின் அடிப்படையில், இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.