தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ அழைப்பில் மட்டுமே பார்த்து வந்த பெண் மருத்துவர்.! முதன்முறையாக கையில் தூக்கிய நெகிழ்ச்சி வீடியோ.!



first time women doctor lift her child in hand

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டு தான் பெற்ற குழந்தையை முதல்முறையாக கையில் ஏந்திய பெண் மருத்துவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்தவர் அர்பா சஜாதின். 25 வயது பெண் மருத்துவரான இவர் கர்ப்பிணியாக இருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருடைய நிலைமை மோசமாக இருந்ததால் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை உயிருடன் மீட்டனர்.

குழந்தையைப் பரிசோதித்ததில் அதற்கு நெகட்டிவ் வந்த போதும் தாயை விட்டு பிரித்து வைக்கப்பட்டது. குழந்தை பெற்ற மூன்று நாட்களுக்கு பின்னர் அர்பாவின் உடல்நிலை மோசமாகி ஆக்சிஜன் அளவு இறங்கியது. இதனையடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து மருத்துவர் அர்பா மீண்டார். இந்த இடைப்பட்ட 10 நாட்களில் தனது குழந்தையை வீடியோ அழைப்பின் மூலம் அவர் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து பின்னர் தனது குழந்தையை ஆனந்த கண்ணீருடன் கையில் ஏந்தி கொஞ்சியுள்ளார் அர்பா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.