"திருக்குறளில் கூறியுள்ளவாறே பிரதமர் மோடியின் ஆட்சி நடந்து வருகிறது" நிதியமைச்சர் புகழாரம்!
2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
பல பிரிவுகளாக பிரித்து பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், இடையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடியின் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசினார்.
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை கூறிய நிதியமைச்சர், இந்த குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள 5 முக்கிய அம்சங்களையும் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு குறைவில்லாமல் அளித்து வருவதாக கூறினார்.
அந்த 5 முக்கிய அம்சங்கள், 1. நோய் இல்லாத வாழ்க்கை, 2.செல்வம், 3.நல்ல விளைச்சல், 4.மகிழ்ச்சியான வாழ்க்கை, 5.நல்ல காவல். இவை அனைத்தையும் மக்களுக்கு பிரதமர் மோடி அரசு அளித்து வருவதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.