மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளின் குடும்ப பிரச்சினைக்காக; சம்மந்தியை கொடூரமாக அடித்துக் கொன்ற.... குடும்பத்தினர்..!
அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் படோடி பகுதியில் வசித்துவருபவர் சுரேஷ் குமார் (55). இவரது மனைவி சாவித்ரி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். ராஜேந்திரனுக்கு பபிதா என்ற பெண்ணுடன் கல்யாணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜேந்திரனுக்கும் அவரது மனைவி பபிதாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனை தொடர்ந்து பபிதா கணவரிடம் உள்ள கோபத்தில் தனது குழந்தையுடன் அங்கிருந்து வெளியேறி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, இந்த பிரச்சினை குறித்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் பப்தா கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, பபிதாவின் தந்தை, சகோதரர்கள் நால்வர் என மொத்தம் ஐந்து பேர் நேற்று பபிதாவின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் இருந்த மாமனார் சுரேஷிடம் ஐந்து பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பபிதாவின் சகோதரர்கள், தந்தை என 5 பேரும் சுரேஷை கடுமையாக தாக்கினர். தடுக்க முயன்ற சுரேஷின் மனைவி சாவித்ரி மற்றும் மகளையும் 5 பேரும் அடித்துள்ளனர். காப்பாற்றும்படி சாவித்ரி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
அவர் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால், தாக்குதல் நடத்திய ஐந்து பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த சுரேஷை அக்கம்பக்கத்தினர், அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.