மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: மதுவிற்காக இந்தியர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய வெளிநாட்டுப் பெண்!
ஏர் இந்தியா விமானத்தில் அளவுக்கதிகமாக மது கேட்டு ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண் மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ள வீடியோவானது வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் அந்த வெளிநாட்டு பெண் பயணம் செய்துள்ளார். அப்போது எல்லா பயணிகளும் வழங்குவது போல் மதுபானம் அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
போதை தலைக்கு ஏறிய பின்னரும் மேலும் மது வேண்டும் என்று அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தகராறில் ஈடுபட்டுள்ளார் அந்த வெளிநாட்டு பெண்.
Irish lady behaves in such an abusive, racist way with @airindiain crew for being refused extra drinks. Very decent AI crew behaviour. Arrested on landing. Wonder if she should have been controlled onboard with handcuffs. @JitiBhargava @Mohan_Rngnathan pic.twitter.com/kSTDmGOEm5
— Tarun Shukla (@shukla_tarun) November 13, 2018
பின்னர் அவர்களை சமாதானம் செய்ய வந்த விமானியிடமும் மிகவும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார் அந்தப்பெண். அதோடு மட்டுமல்லாமல் அவர் மீது எச்சில் துப்புவது போன்ற காட்சிகள் உள்ளன. மேலும் அந்த குடிகார பெண் மிகவும் கெட்ட வார்த்தைகளால் ஏர் இந்தியா நிறுவனத்தையும், இந்தியர்களை திட்டியுள்ளார். அந்த குடிகார பெண் பேசும் அத்தனை கொடிய வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருந்துள்ளார் அந்த விமானி. மேலும் பணி பெண்ணிடமும் அந்த குடிகார பெண்ணை தொட வேண்டாம் எனவும் எச்சரிக்கிறார்.
Even the other passengers are embarrassed. So shameful pic.twitter.com/IttfjDwBiM
— Tarun Shukla (@shukla_tarun) November 13, 2018
தான் "பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர்" என்றும் கூறியுள்ளார். விமானம் லண்டன் சென்று அடைந்ததும் அந்த பெண்ணை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.