தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: சரியான பொறுப்பே கொடுக்கவில்லை.. கட்சி தாவிய முக்கிய அரசியல் புள்ளி... அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பொறுப்பில் இருந்தவர், கட்சிதாவலுக்கு பின்னர் தனக்குரிய பதவி கிடைக்கவில்லை என்று கருதி, புதிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அவரின் ஆதரவாளர்களும் விரைவில் அக்கட்சியில் இணையவுள்ளதாக தெரியவருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்து வந்தவர் அசோக் தன்வார். இவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நட்பிலும், உதவியாளராகவும் இருந்து வந்தார். இத்தகைய சூழலில், அம்மாநில முன்னாள் முதல்வரான பூபிந்தர் சிங் ஹூடாவுடன் கட்சி பணிகள் தொடர்பாக பனிப்பகை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அசோக் தன்வார், தன்னை காங்கிரசில் இருந்து விலகிக்கொண்டார்.
இதனால் அம்மாநில அரசியல் வட்டாரம் பேரதிர்ச்சியை சந்தித்த நிலையில், அதற்கு மேலும் சூடேற்றும் வகையாக நவம்பர் 2021-இல் அசோக் தன்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலையில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில், அவர் மீண்டும் கட்சித்தாவி இருக்கிறார்.
டெல்லி சென்றுள்ள அசோக் தன்வார், தன்னை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மீ கட்சியில் இணைத்துக்கொண்டார். அவரின் ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து டெல்லி சென்று ஆம் ஆத்மீ கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் திரிணாமுல் காங்கிரசில் தற்போது இருக்கும் நிலையில், அவர்களும் அசோக் தன்வாருடன் ஆம் ஆத்மீயில் இணையவுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பொறுப்பில் இருந்த அசோக் தன்வாருக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உயரிய பதவி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் ஆம் ஆத்மீயில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.