மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோசடி வழக்கு.. உயிரோடு இருக்கும் மனைவிக்கு போலி இறப்பு சான்றிதழ் வாங்கிய போலீஸ் கான்ஸ்டபிள்.!
ஆந்திர மாநில மங்களகிரி பகுதியில் வசித்துவரும் சிவசங்கரய்யா சிறப்பு அதிரடிபடை போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன சிவசங்கரய்யாவிற்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சிவசங்கரய்யா மற்றும் அவரது மனைவி மாதவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் 2 மகன்களும் மாதவியுடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இவ்வாறிருக்க இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் சிவசங்கரய்யா தனது மனைவி பெயரில் நான்கு சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இப்போது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் சிவசங்கரய்யா அந்த நிலத்தை தன் பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு மாதவியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் மாதவி தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் நிலத்தை கணவருக்கு எழுதி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரய்யா எப்படியாவது அந்த நிலத்தை கைப்பற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதனையடுத்து சிவசங்கரய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி மாதவி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் ஒன்றை தயார் செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த இறப்பு சான்றிதழை ஆதாரமாக வைத்து மாதவி பெயரில் இருந்த நிலத்தை தன்னுடைய சகோதரி ஆதிலட்சுமி பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். மேலும் அந்த நிலத்தை 40 லட்ச ரூபாய்க்கு ஒருவரிடம் விற்பனை செய்ய முடிவு செய்து பேரம் பேசியுள்ளார். இதை பற்றி தகவல் அறிந்த மாதவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் சிவசங்கரய்யா மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெறும் 4 சென்ட் நிலதிற்காக உயிரோடு இருக்கும் மனைவிக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய போலீஸ் கான்ஸ்டபிளின் மோசடி செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.