35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
கொரோனா எதிரொலி: இலவச சிலிண்டருக்கான பணத்தை முன்கூட்டியே வங்கி கணக்கில் செலுத்த முடிவு.!
கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 15-ம் தேதிவரை யாரும் வீட்டை வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெறும் பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டருக்கான பணத்தை முன்கூட்டியே வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக மாநிலங்களுக்கான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி பயனாளிகள் சிலிண்டரை ஒரு மாதத்திற்கு ஒன்று என பெறும் வகையில் அதற்கான பணத்தை முன்கூட்டியே வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பயனாளிகள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து சிலிண்டரை வாங்கி கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.