மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டே நண்பர்களோடு மது விருந்து; கடைசியில் நடந்த விபரீதம்!
டெல்லியில் நண்பனின் வீட்டில் ஒன்றாக மது அருந்திவிட்டு மனைவியின் கண்முன்னே நண்பனை கொலை செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நாங்கலாய் பகுதியில் தன் மனைவியோடு வசித்து வந்தார் தீபக். இவருக்கு வயது 34. இவர் தொழில் ரீதியாக சில நாட்களுக்கு முன்பு ஹரித்துவார் சென்றுள்ளார். வேலைகளை முடித்துவிட்டு கடந்த புதன்கிழமை இரவு மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளார். அப்போது தீபக்கை பார்க்க அவரது நண்பர்கள் இருவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.
அன்று இரவு அவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து தீபக்கின் வீட்டிலேயே மது அருந்தியுள்ளனர். தீபக்கின் மனைவியும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. தீபக்கின் நண்பர்கள் இருவரும் சேர்ந்து தீபக்கை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். தீபக் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்கனவே சில குற்றப் பின்னணி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் தீபக்கின் மனைவி இதுகுறித்து நள்ளிரவில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் தீபக்கின் உடலை கைப்பற்றி கொலையாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.