மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல்நிலை சரியில்லாத சிறுமியை மந்திரவாதியிடம் விட்டுவந்த பெற்றோர்.. உடல்முழுவதும் காயத்துடன் சிறுமிக்கு தீவிர சிகிச்சை.! நடந்த பயங்கரம்..!!
உடல் நலம் சரியில்லாத சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால், தற்போது மிகவும் மோசமான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமிக்கு ஹோலிப்பண்டிகை அடுத்து உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியான மௌலானா வாஹித்திடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் உடலில் தீய சக்திகள் புகுந்துள்ளன என கூறிய மந்திரவாதி பூஜைகள் செய்து அதனை நான் விரட்டுகிறேன் என்று சிறுமியை இங்கேயே விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய குடும்பத்தினரும் மந்திரவாதியிடம் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து நான்கு நாட்களுக்கு பின் வந்து பார்த்தபோது, சிறுமியின் முகம் மற்றும் உதடு, கால் என பல்வேறு இடங்களில் தீக்காயங்கள் இருந்துள்ளன. மேலும், சிறுமி இயல்பான மனநிலையை விடுத்து புலம்பிக்கொண்டே இருந்துள்ளார்.
இதனைக்கண்ட பெற்றோருக்கு சிறுமியின் உடலில் தீய சக்திகள் புகுந்து விட்டது என சொல்லி அதனை விரட்டுகிறேன் என்று அவரை அடித்து துன்புறுத்தியதும், உடல் முழுவதும் சூடு போட்டு காயப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன் சிறுமியின் உடல் நலமானது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, சிறுமியை துன்புறுத்தி, காயப்படுத்திய மந்திரவாதி மீது குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், மந்திரவாதி மீது கொலை முயற்சி, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.