கோவா முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு!



Goa cm affected by corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஆரம்பத்திலிருந்து அரசு ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். 

இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவரது டுவிட்டர் பதிவில், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் நான்  வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். வீட்டிலிருந்து எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.