மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
# BREAKING கோவா மாநில முதல்வர் திடீர் மரணம்!! சோகத்தில் மூழ்கிய அரசியல் வட்டாரங்கள்!!
முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார். பின்னர், கோவாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவாவின் முதல்வராக இருந்துவருகிறார்.
கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்கள் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றுவந்தார். நாடு திரும்பிய அவர், முதல்வராக பணியாற்றிவந்தார். அவ்வப்போது, முதல்வர் அலுவலகமும் வந்தார்.
இருப்பினும், தொடர்ச்சியாக அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது இந்தநிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.