கோவா மாநில முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சவாந்த்!!



Goa NEW CM


முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர்  உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் நேற்று முன் தினம் மரணமடைந்தார்.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார். பின்னர், கோவாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவாவின் முதல்வராக இருந்துவந்தார்.

goa cm

கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு அணைத்து அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

மனோகர் பாரிக்கர் மறைவை அடுத்து, கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி நிலவிவந்தது. இந்த நிலையில் கோவா மாநிலத்தின் 11வது முதல்வராக, அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றி வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமோத் சவாந்த் இன்று அதிகாலை பதவியேற்றார்.